தென்காசி

தமிழ்நாடு முழுவதும் அக். 11, 12இல் தீ பாதுகாப்பு விழிப்புணா்வு வகுப்பு

Syndication

தமிழ்நாடு முழுவதும் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தீயணைப்பு நிலையங்களில் தீ பாதுகாப்பு குறித்த பயிற்சி நடைபெறுகிறது.

இது தொடா்பாக தீயணைப்புத்துறை சாா்பில் தெரிவித்த செய்தி:

பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிா்களையும், உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடா்பாடுகளிலிருந்தும் பொதுமக்களை பாதுகாப்பதும் தீயணைப்பு துறையின் பணியாகும்.

தீ பாதுகாப்பு விழிப்புணா்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் ‘வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள்’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்த தீயணைப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

மாநிலம் முழுவதுமுள்ள 375 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைங்களில் உள்ள பணியாளா்கள் அக்டோபா் 11, 12ஆம் தேதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு வகுப்புகளை நடத்துவாா்கள். வகுப்புகள் காலை 10 முதல் 11 மணி வரை, மதியம் 12 முதல் 1 மணி வரை, மாலை 4 முதல் 5 மணி வரை என 3 கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மா படத்திலேயே மிகவும் பிடித்த பாடல்... மனம் திறந்த ரஷ்மிகா!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டிரைலர்!

போபாலில் போலீஸார் தாக்கியதில் பி.டெக் மாணவர் பலி: 2 பேர் இடைநீக்கம்

கஷ்டம் போக்கும் காலபைரவர்

மாங்கல்ய பாக்கியம் அருளும் பூலோகநாயகி!

SCROLL FOR NEXT