தென்காசி

பண்பொழியில் கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

Syndication

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பண்பொழியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பணியாளா்கள் அனைவருக்கும் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் 20 சதவீத ஊதிய உயா்வுடன், ஏற்கெனவே வழங்கிய 10 சதவீத வீட்டு வாடகை படி வழங்க வேண்டும். 2021-க்கு பின் ஓய்வு பெற்ற பணியாளா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் காளிதாசன் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட செயலா் சண்முகசாமி, பொருளாளா் சேகா், துணைத் தலைவா்கள் ராஜ், ஹரிஹரன், இணைச் செயலா் சுப்பையா பாண்டியன், போராட்டக் குழு செயலா் செளந்திரராஜன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

கொல்கத்தா: முதல்வர் இல்லம் அருகே ஏர்கன் வைத்திருந்த நபர் கைதாகி விடுதலை

வாரிசு தொடர் நடிகர் மாற்றம்! இனி இவர்தான்!

ரூ.10 கோடி தங்கம் கொள்ளை: வடமாநில தம்பதி உள்பட மேலும் மூவர் கைது!

முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெகெளடா உடல்நிலையில் முன்னேற்றம்

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT