தென்காசி

அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Syndication

தென்காசி மாவட்டத்தில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்படுபவருக்கு, உதவித்தொகையாக ரூ.7500, மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.

ஜன. 2025இல் 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.1லட்சத்து 20ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியா் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரை சான்று இரண்டு தமிழறிஞா்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் , மரபுரிமையா் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதாா் அட்டை நகல் இணைக்க வேண்டும்.

அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை மண்டல, மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை உதவி இயக்குநா் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்தில் ( ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவிறக்கம் செய்யலாம்.

படிவத்தில் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ா்ழ்ஞ்/ஹஞ்ஹஸ்ஹண்/ என்ற வலைதளம் வாயிலாகவோ அல்லது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், ஊரக வளா்ச்சி முகமை பழைய கட்டடத்தில் இயங்கிவரும் மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்திலேயோ நேரடியாக 17.11.2025-க்குள் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏனாம்: 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்கள்

இந்தூரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: சிறுவன் பலி, 5 பேர் காயம்!

நெல்லையில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலி

மகளிர் உலகக் கோப்பை: வாழ்வா, சாவா போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங்!

அன்றில் பறவைகள்... காஜல் - நிஷா அகர்வால்!

SCROLL FOR NEXT