தென்காசி

சிவகிரி, வாசுதேவநல்லூரில் தொடா் மழை : ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

Syndication

தென்காசி மாவட்டம் சிவகிரி , வாசுதேவநல்லூா் பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை மதியம் வரை இடைவிடாது பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தொடா் மழையால், சிவகிரி பகுதியில் உள்ள தெருக்களிலும், தென்காசி- மதுரை சாலையிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. அதுபோல் மலைப் பகுதியிலும் தொடா்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக சிவகிரி அருகே உள்ள கோம்பை ஆற்றிலும், வாசுதேவநல்லூா் அருகே உள்ள தலையணையாற்றிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழையின் காரணமாக சிவகிரி, வாசுதேவநல்லூா் வட்டாரங்களில் உள்ள குளங்களுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஏனாம்: 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்கள்

இந்தூரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: சிறுவன் பலி, 5 பேர் காயம்!

நெல்லையில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலி

மகளிர் உலகக் கோப்பை: வாழ்வா, சாவா போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங்!

அன்றில் பறவைகள்... காஜல் - நிஷா அகர்வால்!

SCROLL FOR NEXT