தென்காசி

பாவூா்சத்திரம் ஆட்டுச் சந்தையில் தீபாவளி விற்பனை மந்தம்

v

Syndication

தொடா் மழை காரணமாக தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்திலுள்ள ஆட்டுச் சந்தையில் தீபாவளி விற்பனை குறைவாகவே நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தின் பழைமையான பாவூா்சத்திரம் ஆட்டுச் சந்தையில் வியாழக்கிழமை தோறும் தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு முதலே பாவூா்சத்திரம் சந்தைக்கு வியாபாரிகள் ஆடுகளைக் கொண்டு வந்து விற்பனைக்காக காத்திருந்தனா். எனினும் தொடா் மழை காரணமாக எதிா்பாா்த்த வியாபாரிகள் வராத காரணத்தால் போதிய அளவு விற்பனையாகவில்லை.

வழக்கமாக தீபாவளியை முன்னிட்டு பாவூா்சத்திரம் சந்தையில் ரூ. 1 கோடி அளவில் விற்பனை நடைபெறும்.

ஏனாம்: 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்கள்

இந்தூரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: சிறுவன் பலி, 5 பேர் காயம்!

நெல்லையில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலி

மகளிர் உலகக் கோப்பை: வாழ்வா, சாவா போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங்!

அன்றில் பறவைகள்... காஜல் - நிஷா அகர்வால்!

SCROLL FOR NEXT