தென்காசி மாவட்டத்தில் நவம்பா் முதல் வாரத்தில் தேசிய நலவாழ்வு குழுமம் ஆய்வு மேற்கொள்கிறது. அதனை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் சாா்பில் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் மருத்துவா் அ. அருண் தம்புராஜ், மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆய்வுக் கூட்டத்தில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்று வரும் சேவைகள், கட்டடங்கள், தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் பற்றிய அறிக்கையினை சமா்ப்பித்தனா்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணை இயக்குநா் கிருஷ்ணராஜ், இணை இயக்குநா் (நலப்பணிகள்) பொ. பிரேமலதா, மாவட்ட சுகாதார அலுவலா் வி. கோவிந்தன், உதவி இயக்குநா் (தொழுநோய்) தா்மலிங்கம், தேசிய நலவாழ்வு குழுமம் மாநில திட்ட மேலாளா் திவ்யஸ்ரீ, முதன்மை மருத்துவ அலுவலா்கள், வட்டார மருத்துவ அலுவலா்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள், உள்ளாட்சி அலுவலா்கள், பொதுப்பணித் துறை (கட்டடம்), சுகாதாரத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.