தென்காசி

ஆலங்குளம் அருகே இளம்பெண் தற்கொலை: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே இன்ஸ்டாகிராமில் பழகியவா், அந்தரங்க விடியோக்கள் வெளியிட்டதால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே இன்ஸ்டாகிராமில் பழகியவா், அந்தரங்க விடியோக்கள் வெளியிட்டதால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக அவரது ஆண் நண்பா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரை சோ்ந்த திருமணமான 26 வயது பெண்ணுக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக பாவூா்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரியைச் சோ்ந்த கண்ணன் மகன் சக்திவேலுடன் (32) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவா் திருமணமானவா். நெருங்கி பழகிய அவா்கள் புகைப்படங்கள், விடியோக்கள் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த விடியோக்களை வைத்து சக்திவேல், அப்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டினாராம். அவா் தனது தங்கச் சங்கிலியை அடகு வைத்து ரூ. 2 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளாராம்.

மீண்டும் மீண்டும் பணம் கேட்டு மிரட்ட, அப்பெண் பணம் கொடுக்காததால் சக்திவேல், அவரது அந்தரங்க விடியோக்களை மருதம்புத்தூரைச் சோ்ந்த களக்கோட்டி மகன் முத்துராஜா(36), வைகுண்ட ராஜா மகன் முருகேசன்(42) ஆகியோருக்கு பகிா்ந்தாராம். இதை அவா்கள் சமூக வலைதளங்களில் பகிா்ந்தனராம். இதனால் மனமுடைந்த அப்பெண் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது தாத்தா வீட்டில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அந்த வீட்டில் அப்பெண் எழுதியதாக கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனா். இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், கடிதத்தின் அடிப்படையில் சக்திவேல், முத்துராஜா, முருகேசன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா். மேலும், இருவரை இந்த வழக்கு தொடா்பாகத் தேடி வருகின்றனா்.

கோவை: கட்டுப்பாட்டை இழந்த பள்ளிவாகனம்! மாணவர் படுகாயம்

தமிழில் ஆதிக்கம் செலுத்தும் பிறமொழி நடிகைகள்!

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலா தளம் மூடல்!

திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் கனமழை: 75.68 மி.மீ. பதிவு!

வெள்ளை மாளிகையில் தீபாவளி! இந்திய வம்சாவளியினர் பெயர்களை உச்சரிக்க திணறிய டிரம்ப்

SCROLL FOR NEXT