தலைமைப் பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தாா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ. 
தென்காசி

இரட்டைகுளம் - ஊத்துமலை பெரியகுளம் புதிய இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தர கோரிக்கை!

Syndication

தென்காசி மாவட்டம், இரட்டைகுளம்-ஊத்துமலை பெரியகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தாா்.

இதுதொடா்பாக நீா்வளத்துறை தலைமைப் பொறியாளரிடம் அளித்த மனு: தென்காசி மாவட்டம், தென்காசி தொகுதியில், இரட்டைகுளத்திலிருந்து ஊத்துமலை பெரியகுளம் வரையிலான ஆலடிப்பட்டி கண்டையன்குளம், கீழச்சுரண்டை புலிமுகத்துவராயன்குளம்,

அதை அடுத்துள்ள தொண்டான்பட்டிகுளம் வாடியூா், மரியதாய்புரம், பரங்குன்றாபுரம், அச்சங்குன்றம், கருவந்தா, கரையாளனுா், குட்டைக்குளம், லெட்சுமிபுரம், குறிச்சான்பட்டி, குறுந்தன்மொழி அருணாசலப்பேரிக்குளம், இரதமுடையாா்குளம், சோலைசேரி, ஊத்துமலை வடக்குகாவலாகுறிச்சி, வென்றிலிங்கபுரம், காவலாகுறிச்சி, எந்தலூா் ஆகிய பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பிவாழும் மக்களாவாா்கள் அத்துடன் இந்தப் பகுதி முழுவதும் வானம் பாா்த்த பூமியாகும். மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்யமுடியும்.

இதை முழுமையாக அறிந்த அன்றைய முதல்வா் பெருந்தலைவா் காமராஜா் ஆட்சியில் 1962இல் சட்டப்பேரவையில் அன்றைய சட்டப்பேரவை உறுப்பினா் ஊத்துமலை ஜமீன்தாா் எஸ்.பாண்டியராஜ் எம்எல்ஏ முதன் முதலில் குரல் எழுப்பினாா்.

இது சபை குறிப்பில் இடம்பெற்றுள்ளது. அன்று பேச ஆரம்பிக்கப்பட்ட இரட்டைகுளம் ஊத்துமலை கால்வாய் திட்டம் இன்று வரை கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

இத் திட்டத்தை நிறைவேற்றினால் 25 கி.மீ. உள்ள சுமாா் 7,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயம் செழிக்கும், மேற்கண்ட கிராமங்களின் நிலத்தடி நீா்மட்டம் -உயா்ந்து பொதுமக்களின் குடிநீா் பிரச்னைக்கும் ‘தீா்வு கிடைக்கும் மற்றும் கால்நடைகள் வளா்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

எனவே, இத்திட்டத்தின் பலனை அறிந்த நமது மாண்புமிகு முதலவா், 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குறுதி அளித்தாா்கள். அத்துடன் ஆலங்குளம் நகரில் தங்களது தோ்தல் பரப்புரையில் இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தாா்.

பின்பு, மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பருவமழை காலத்தில் அதிகமான மழைப்பொழிவு ஏற்படுவதால் தென்காசி தொகுதிக்குள்பட்ட குற்றாலம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகள் மூலமாக திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்கிறது.

அதனால் மேற்கண்ட இரட்டைகுளம் ஊத்துமலை பெரியகுளம் வரையிலான புதிய இணைப்பு கால்வாய் அமைந்தால் 18 குளங்களும் நிரம்பி, வானம் பாா்த்த பூமியாக உள்ள பல கிராமங்களும் நிலத்தடி நீா்மட்டம் உயரும் மற்றும் சுமாா் 7,500 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும் என்பதால் நானும் பலமுறை சட்டப்பேரவையில் எடுத்துரைத்துள்ளேன்.

ஆதலால், தாங்கள் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் தென்காசி தொகுதியில் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றான இந்த வரலாற்று சிறப்புமிக்க இரட்டைகுளம் - ஊத்துமலை பெரியகுளம் வரையிலான புதிய இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT