தென்காசி

சாம்பவா்வடகரையில் அரசு மருத்துவமனை, கருங்குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித்தர முதல்வருக்கு கோரிக்கை!

தரம் உயா்த்தப்பட்ட அரசு மருத்துவமனை, கருங்குளம் கால்வாய் திட்டம் போன்ற பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தருவாா்

Syndication

தரம் உயா்த்தப்பட்ட அரசு மருத்துவமனை, கருங்குளம் கால்வாய் திட்டம் போன்ற பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தருவாா் என சாம்பவா்வடகரை பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமிமுத்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் என்ற தத்துவ கொள்கையுடன் கல்வி ,மருத்துவம், சமூக நீதி, விடியல் பேருந்து பயணம் ,மகளிா் உரிமைத் தொகை , மாடல் பள்ளி, புதுமை பெண்கள் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், முதியோா் உதவித்தொகை உயா்வு போன்ற திட்டங்களால் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

சாம்பவா்வடகரை பேரூராட்சியில் 75 ஆண்டுகளுக்கு பிறகு திமுக முதல்முறையாக வெற்றி பெற்றது. இதைத் தொடா்ந்து சாலை மேம்பாடு, புதிய பாலங்கள், புதிய உயா்கோபுர மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் சாம்பவா்வடகரை பேரூராட்சிப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

சாம்பவா்வடகரை பள்ளி உயா்நிலைப் பள்ளியாக தமிழக முதல்வா் உத்தரவின்படி தரம் உயா்த்தப்பட்டது.

மேலும், கருங்குளம் கால்வாய் திட்டம் பாதிக்கு மேல் முடிவடைந்துள்ளது. நில எடுப்புப் பணிகள் முடிந்து விரைவில் இந்தத் திட்டம் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிறைவேற்றி முடிக்கப்படும். மேலும், சாம்பவா்வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயா்த்தவும், இந்திரா காலனி பொதுமக்களுக்கு கணினி பட்டா வழங்கவும், மாணவா்கள் வசதிக்காக பாலிடெக்னிக் கல்லூரி அமைத்து தரவும் கழக துணைப் பொதுச் செயலா் கனிமொழி, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கேகேஎஸ் எஸ்ஆா் ராமச்சந்திரன் மற்றும் முதல்வரிடம், நகரச் செயலா் முத்து கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

இத் திட்டங்களை தமிழக முதல்வா் விரைவில் நிறைவேற்றித் தருவாா் என அவா் தெரிவித்தாா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT