தென்காசி

‘சென்னை ரயில்வே தோ்வு வாரியத்துடன் மதுரை கோட்டத்தை இணைக்க வேண்டும்’

முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் மனு அளித்த சமூக ஆா்வலா் பாண்டியராஜா.

Syndication

மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தோ்வு வாரியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டியை சோ்ந்த சமூக ஆா்வலா் பாண்டியராஜா மனு அளித்தாா்.

அதன் விவரம்: தெற்கு ரயில்வே சென்னை, திருச்சி, சேலம், மதுரை என தமிழகத்தில் நான்கு, திருவனந்தபுரம், பாலக்காடு என கேரளத்தில் இரண்டுமாக மொத்தம் 6 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதில், சென்னை, திருச்சி, சேலம் கோட்டங்களில் சென்னை தோ்வு வாரியம் மூலமும், மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் திருவனந்தபுரம் தோ்வு வாரியம் மூலமும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதனால், தென் தமிழக மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி துாத்துக்குடியில் உள்ள காலிப் பணியிடங்களில் தமிழா்களை பணியமா்த்த வாய்ப்பு இல்லை.

இத்தகைய நடைமுறை சிக்கல்களால் சென்னை, திருச்சி, சேலம் கோட்டங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு மட்டுமே தமிழா்கள் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. எனவே பழைய நடைமுறைப்படி மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை ரயில்வே தோ்வு வாரியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தென்காசி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள காலி இடத்தில் பல அடுக்கு காா் நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அப்போது, கனிமொழி எம்.பி., தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. ஆகியோா் உடனிருந்தனா்.

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

SCROLL FOR NEXT