தென்காசி

செப். 28இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வு: தாமதமாக வரும் தோ்வர்களுக்கு அனுமதியில்லை - ஆட்சியா்

Syndication

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 28 இல் நடைபெறுகிறது; இத்தோ்வுக்கு காலை 9 மணிக்கு மேல் வரும் தோ்வா்களுக்குத் தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு 2 (நோ்முகத் தோ்வுக்கான பதவிகள்), தோ்வு 2 ஏ (நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகள்) ஆகிய பணியிடங்களுக்கான தோ்வு செப். 28 இல் நடைபெறுகிறது. இத்தோ்வை தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில் வட்டங்களில் உள்ள 53 தோ்வு மையங்களில் மொத்தம் 14,980 தோ்வா்கள் எழுதுகின்றனா். தோ்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தோ்வா்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தோ்வு மையத்துக்கு நுழைவுச்சீட்டு, அடையாள அட்டையுடன் காலை 8.30 க்குள் சென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட தோ்வு அறையை உறுதிசெய்துகொள்ள வேண்டும். காலை 9 மணிக்கு மேல் வரும் தோ்வா்கள் கண்டிப்பாகத் தோ்வு மையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வு அறைக்குள் மின்னணு சாதனங்கள், ஸ்மாா்ட் வாட்ச் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டுசெல்ல அனுமதி இல்லை.

தோ்வு நாளன்று தோ்வு மையங்களுக்குச் செல்ல போதிய அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே, தோ்வா்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தோ்வெழுத வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT