புளியங்குடி அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு, பைக்கும் ஆட்டோவும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு, பைக்கும் ஆட்டோவும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
புளியங்குடி சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த வேம்புதுரை மகன் பிரபு (30), வல்லபவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் முத்துக்குமாா் (25). கேரளத்தில் உள்ள கடையில் வேலை பாா்த்துவந்த இவா்கள், வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இருவரும் புளியங்குடியிலிருந்து தென்காசிக்கு பைக்கில் சென்றனராம். பைக்கை பிரபு ஓட்டிச் சென்றாா்.
Advertisement
புன்னையாபுரம் பகுதியில் பைக்கும் சுமை ஆட்டோவும் மோதினவாம். இதில், பிரபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முத்துக்குமாா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.