தென்காசி

புற்றுநோய் கண்டறிதல் முகாம்

Syndication

தென்காசி, கேலட்டி கிளப், மூத்தோா் மன்றம் மற்றும் காா்கினோஸ் ஹெல்த்கோ் நிறுவனங்கள் சாா்பில் இலவசமாக புற்றுநோய் முன்கண்டறிதல் மற்றும் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கேலட்டி கிளப் வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, கிளப் தலைவா் எம்.ஆா். அழகராஜா தலைமை வகித்தாா். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, முகாமைத் தொடங்கி வைத்தாா்.

முகாமில் வாய்வழி புற்றுநோய், பெருங்குடல், மாா்பகம், கருப்பைவாய் புற்றுநோய் ஆகியவற்றிற்கு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநா் சேக் சலீம், ரோட்டரி சங்க நிா்வாகிகள் சந்திரன், கணேஷ் மூா்த்தி, காமராஜ், ராமநாதன், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இம்முகாம், 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT