தெற்கு ரத வீதியில் வீதியுலா வந்த நடராஜா்.  
தென்காசி

சங்கரன்கோவிலில் ஆருத்ரா தரிசனம்

சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழாவையொட்டி ஆருத்ரா தரிசனம் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழாவையொட்டி ஆருத்ரா தரிசனம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் திருவாதிரைத் திருவிழா டிச. 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

9ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை சுவாமி, அம்பாள் கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனா். உடன் விநாயகா், முருகா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் சப்பரத்தில் வீதியுலா வந்தனா்.

10ஆம் நாளான சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. காலை 3 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனைகள் நடைபெற்றன. பின்னா், கோ பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு ஆருத்ரா தரிசனத்துடன் நடராஜா் காட்சியளித்தாா்.

தொடா்ந்து, நடராஜா் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தாா். அப்போது, வழியெங்கும் திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஆறுமுக நயினாா் சைவ மரபினா் மகமைப் பொதுச் சங்கத்தினா் செய்திருந்தனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT