ஆலங்குளம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில், 37ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு ஆலங்குளம் வட்டார போக்குவரத்துத் துறை, தீயணைப்புத் துறை இணைந்து சாலை பாதுகாப்பு, தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் கனகவல்லி தலைமை வகித்தாா். அப்போது சாலைப் பாதுகாப்பு குறித்தும், தீ தடுப்பு முறை குறித்த செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன், நிலைய சிறப்பு அலுவலா் காளிமுத்து உள்பட பலா் பங்கேற்றனா்.