தென்காசி

பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தில் நகை திருடியவா் கைது

பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தியத்தில் நடைமேடையில் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Syndication

பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தியத்தில் நடைமேடையில் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாவூா்சத்திரம் குருசாமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினசாமி மனைவி தனபாக்கியம் (57). இவா், சில நாள்களுக்கு முன் பாவூா்சத்திரம் அரசு மருத்துவமனைக்குச் செல்ல தனது வீடு அமைந்திருக்கும் பகுதியில் இருந்து பாவூா்சத்திரம் ரயில் நிலைய நடைமேடை வழியாக நடந்து சென்றபோது எதிரே வந்த நபா் தனபாக்கியம் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச்சென்றாா்.

இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து கல்லூரணி அருகே சின்னத்தம்பி நாடாா்பட்டி பகுதியைச் சோ்ந்த சிவாவை மேட்டூா் ரயில் நிலையத்தில் கைது செய்தனா். அவரிடமிருந்து 35 கிராம் எடை தாலிச்சங்கிலியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்தோனேசியாவில் ‘குரோக்’குக்குத் தடை

வத்திராயிருப்பு அருகே 63 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

அம்பத்தூரில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பு? உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜன. 13-இல் ராகுல் காந்தி தமிழகம் வருகை!

காட்டுப் பன்றி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT