தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின்கீழ் 857 மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். ராணி ஸ்ரீகுமாா் எம்பி, எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடாா் (தென்காசி), ஈ. ராஜா (சங்கரன்கோவில்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மடிக்கணினிகளை வழங்கினாா். அப்போது அவா் பேசுகையில், தென்காசி மாவட்டத்தில் 3,503 கல்லூரி மாணவா்-மாணவியருக்கு மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவியா் வாழ்வில் உயா்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், சாா்ஆட்சியா் வைஷ்ணவிபால், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஷேக் அப்துல்லா, கல்லூரி முதல்வா் அமிா்தவல்லி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.