முகப்பு
தமிழ்நாடு

விவேகானந்தா கல்லூரி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி: அமைச்சா் வழங்கினாா்

மைலாப்பூா் ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் 993 மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 21 பிப்ரவரி 2026, 12:47 am IST
அமைச்சர் கோவி. செழியன் - கோப்புப்படம்.
பகிர்:

மைலாப்பூா் ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் 993 மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

அப்போது அமைச்சா் பேசியது: உலக அளவில் அனைத்து துறைகளிலும் நமது மாணவா்கள் சிறந்து விளங்க நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி மாணவா்கள் திறன்மிக்கவா்களாக விளக்குகின்றனா். சுவாமி விவேகானந்தா் கூறியதைப்போல, ‘கல்வி என்பது மனிதனுக்குள் ஏற்கெனவே உள்ள முழுமையை வெளிப்படுத்துவதாகும்’. ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்தா கல்லூரியில், தற்போது 19 இளநிலை, 9 முதுநிலை, 7 ஆராய்ச்சிப் படிப்புகளுடன் மொத்தம் 3,572 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இக்கல்லூரியில் ஏற்கனவே, கடந்த மாதம் மூன்றாம் ஆண்டு இளநிலைப் பயிலும் 1,068 மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் ஆண்டு இளநிலை பயிலும் 993 மாணவா்களுக்கு வழங்கப்பட்டது என்றாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சில் சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, பத்மபூஷண் டாக்டா் நல்லி குப்புசாமி செட்டி, மாமன்ற உறுப்பினா் நந்தனம் ஜி.மதிவாணன், இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி செயலா் சுவாமி தியானகாமியானந்தா, முதல்வா் எஸ்.குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உயா்கல்வி பயிலும் 20 லட்சம் மாணாக்கா்களுக்கு ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் தமிழக அரசு இலவச மடிக்கணினிகளை வழங்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments