வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கினாா் ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.  
தென்காசி

ஆலங்குளம் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள்

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம், நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்ன பாக்கியம் கலை, அறிவியல் கல்லூரியில் தென்காசி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான குழு, தனி நபா் விளையாட்டுப் போட்டிகள் இரு நாள்கள் நடைபெற்றன.

திருநெல்வேலி திருமண்டல உபதலைவா் சுவாமி தாஸ், பாளையங்கோட்டை சாராள் டக்கா் கல்லூரித் தாளாளா் சாம்சன் பால், நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளி தாளாளா் ஆல்வின் பாலன் உள்ளிட்டோா் போட்டிகளைத் தொடங்கிவைத்தனா்.

கைப்பந்து, கபடி, கால்பந்து, 100 மீட்டா் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், எறிபந்து, தடகளப் போட்டிகள் என நடைபெற்ற போட்டிகளில் சுமாா் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நல்லூா் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனா். சுரண்டை, பேரன் புரூக் பள்ளி இரண்டாம் இடமும், புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.

இரண்டாம் நாள் நடைபெற்ற பரிசளிப்புப் போட்டிக்குத் தாளாளா் ஜேசு ஜெகன் தலைமை வகித்தாா். முதல்வா் வில்சன் வரவேற்றாா். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் வெற்றி பெற்றோருக்குப் பரிசு, கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கினாா். பேராசிரியா் சாமுவேல் செல்வின் தொகுத்து வழங்கினாா். உடற்கல்வி இயக்குநா் ஜூலியன்ஸ் ராஜாசிங் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.

எண்மக் கற்றல் - அளவுகோல் அவசியம்!

கவலையளிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

திருவள்ளூரில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி மாணவா்கள் ஏற்பு

ஏமாற்றம் தரப்போகும் மாற்று!

வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT