பேரணியைத் தொடங்கி வைத்த காவல் ஆய்வாளா் ஆடிவேல். 
தென்காசி

ஆலங்குளத்தில் விழிப்புணா்வுப் பேரணி

ஆலங்குளத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

ஆலங்குளத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் பழைய காவல் நிலையம் அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற இப்பேரணியை ஆலங்குளம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பின்னா், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் முத்துராஜ் தலைமையில், பள்ளி மாணவா், மாணவிகள், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா்.

நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளா்கள் அருள்மணி, ஞானையா கோமதிநாயகம், இசக்கிபாண்டி, துரைராஜ், ஆறுமுகம், சாலைப் பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்கள் மாணிக்கவாசகம், ஐசக், கோபால கிருஷ்ணன், துரைசிங்கம், கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT