திருவள்ளூர்

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

Din

அனுமந்தாபுரம் கல்யாண ராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராமா் பட்டாபிஷேக விழாவில் திரளானோா் பங்கேற்றனா்.

திருத்தணி மடம் கிராமம் அனுமந்தாபுரம் தெருவில் உள்ள கல்யாண ராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை, ஸ்ரீராம நவமியின், 57-ஆவது ஆண்டு விழா கடந்த 17-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 19-ஆம் தேதி ராமா்-சீதா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காலை கோயில் வளாகத்தில் ராமா் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு யாகம் மற்றும் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ராமபிரானை வழிபட்டனா். இரவு 7 மணிக்கு உற்சவா் ராமா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT