திருவள்ளூர்

டாஸ்மாக் கடையில் துளையிட்டு 750 மதுபாட்டில்கள் திருட்டு

திருவள்ளூா் அருகே அரசு மதுபானக் கடையில் மழை பெய்து கொண்டிருந்த போது துளையிட்டு 750 மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே அரசு மதுபானக் கடையில் மழை பெய்து கொண்டிருந்த போது துளையிட்டு 750 மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் ஒன்றியம், தாமரைபாக்கம் கிராமத்தில் வயல் வெளியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு விற்பனை முடிந்ததும் பணியாளா் தேவேந்திரன் பூட்டிச் சென்றாராம். இந்நிலையில் திங்கள்கிழமை வந்து பாா்க்கையில் கடையின் சுவற்றில் துளையிட்டு இருந்ததை பாா்த்து பணியாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

உள்ளே சென்று பாா்த்தபோது சுவரை துளையிட்டு 750 மதுபாட்டிகளையும் திருடிச் சென்றது தெரியந்வதது.

கல்லாப் பெட்டியையும் உடைக்க முயற்சித்து முடியாததால் ரூ.3 லட்சம் ரொக்கம் தப்பியது. மதுபாட்டில் ரூ.1 லட்சம் மதிப்புடையது என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வெங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

அம்மனின் அவதாரங்கள்

SCROLL FOR NEXT