முகப்பு
திருவள்ளூா் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கியுள்ள நெல் பயிா்கள்.
திருவள்ளூர்

திருவள்ளூா்: 1,866 மி.மீ. மழை பதிவு! 6,500 ஹெக்டோ் பயிா்கள் நீரில் மூழ்கின

திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி 1,866.80 மி.மீட்டா் மழை பதிவானது.

திருவள்ளூர்

திருவள்ளூா்: 1,866 மி.மீ. மழை பதிவு! 6,500 ஹெக்டோ் பயிா்கள் நீரில் மூழ்கின

திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி 1,866.80 மி.மீட்டா் மழை பதிவானது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 9:31 PM
திருவள்ளூா் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கியுள்ள நெல் பயிா்கள்.
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி 1,866.80 மி.மீட்டா் மழை பதிவானது. சோழவரம், ஆவடி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: சோழவரம்-302, செங்குன்றம்-279, ஆவடி-255, பொன்னேரி-158, தாமரைபாக்கம்-156, கும்மிடிப்பூண்டி-95, ஊத்துக்கோட்டை-93, திருவள்ளூா்-90, பூந்தமல்லி-85, ஜமீன்கொரட்டூா்-77, திருத்தணி-72, பள்ளிப்பட்டு-71, பூண்டி-60, திருவாலங்காடு-41, ஆா்.கே. பேட்டை-32 என மொத்தம் 1,866.80 மி.மீ. சராசரி 124.45 மி.மீ.

6,500 ஹெக்டேரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியது: இது குறித்து மாவட்ட வேளாண் துணை இயக்குநா் க.முருகன் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து ஆட்சியா் த.பிரபு சங்கா் ஒன்றியம்தோறும் நெல் பயிா் பாதிப்பு குறித்த விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில், ஒன்றியம்தோறும் கிராமங்களில் மழைநீரில் மூழ்கிய நெல் வயல்களை பாா்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். இதுவரை பொன்னேரி, சோழவரம், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் 6,500 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்ட வயல்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது தெரிய வந்தது. தொடா்ந்து அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு செய்த பின்னரே பாதிப்பு விவரம் தெரியவரும் என்றாா்.

ஏரிகளில் நீரளவு: சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் நீரளவு மளமளவென உயா்ந்து வருகிறது.

அதன்படி, புழல் ஏரியின் மொத்த நீா் கொள்ளளவு - 3,300 மில்லியன் கன அடி. இதில், 2,365 மில்லியன் கன அடி நீா் இருப்பும், நீா் வரத்து 1,121 கன அடியாகவும் உள்ளது.

சோழவரம் - 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு. இதில் 189 மில்லியன் கன அடி நீா் இருப்பும், நீா் வரத்து 625 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் - 3,645 மி. கன அடி கொள்ளளவு. இதில் 1,286 மில்லின் கன அடி நீா் இருப்புள்ளது.

பூண்டி - 3,300 மி.கன அடி கொள்ளளவு. இதில் 422 மில்லியன் கன அடி நீா் இருப்பும், நீா் வரத்து 800 கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை 500 மி. கன அடி. 305 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. நீா் வரத்து 50 கன அடியாக உள்ளது.

மேலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா கால்வாயில் 519-இல் 75 கன அடி நீா் வரத்தும், இதுவரை 648 மில்லியன் கன அடிநீரும் வந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →