விஷ்வா 
திருவள்ளூர்

போதை மாத்திரைகள் விற்றவா் கைது

திருமழிசை அருகே இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

திருவள்ளூா்: திருமழிசை அருகே இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே திருமழிசை அடுத்த மேல்மனம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் விஷ்வா (28). இவா் மீது கொலை உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே திருமழிசை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் மாமுல் கேட்டு மிரட்டுவதாக வெள்ளவேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், விஷ்வாவை போலீஸாா் பிடித்து விசாரணை செய்த போது, தனியாா் நிறுவனத்தில் மிரட்டி மாமுல் வசூலித்து வந்ததும், மேலும், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தததும் தெரியவந்தது.

இதையடுத்து, வெள்ளவேடு போலீஸாா் விஷ்வாவை கைது செய்து, அவரிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவரை போலீஸாா் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT