பாஜக மாவட்ட செயலரை கத்தியால் குத்திய சம்பவம்: 3 போ் கைது
உயிருக்கு ஆபத்தான நிலையில் ரமேஷிற்கு சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
திருவள்ளூா் அருகே பா.ஜ.க மாவட்ட செயலாளரை கத்தியால் குத்திய சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே சிறுவானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் ரமேஷ்குமாா்(54). இவா் பா.ஜ.கவில் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறாா். அதோடு, ஏற்கெனவே சிறுவானூா் ஊராட்சி தலைவா் கடந்த 10 ஆண்டுகள் பதவியில் இருந்தாராம்.
அதேபோல் இவரது மனைவி பவானி கடந்த 5 ஆண்டும், தற்போதும் ஊராட்சி தலைவராக இருந்து வருகிறாா்.
இந்நிலையில், அக் கிராமத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக புதன்கிழமை ஊராட்சித் தலைவா் பவானியும், அவரின் கணவா் ரமேஷும் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த துரை மகன் வேலு என்ற கருவாடு வேலு வீட்டருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது, ஆத்திரமடைந்த வேலு தான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறேன் எனக்கூறி சொந்தமான வீட்டை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.
எனினும் வேலுவின் குடிசை வீட்டை இடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலு, விஜய் மற்றும் திருமுருகன் ஆகியோா் சோ்ந்து தொடா்ந்து தலைவராக இருப்பதால் தான் இதுபோல் செய்து வருகிறாய் எனக்கூறி கத்தியால் சராமரியாக ரமேஷை குத்தினாராம். இதில் பலத்த ாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ரமேஷிற்கு சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடா்பராக அவரது மனைவி பவானி திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து வேலு, வேலு மகன் விஜய், பாவாடை மகன் திருமுருகன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.