முகப்பு
திருவள்ளூர்

கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரசுக் கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கல்லூரி முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 7 ஏப்ரல், 2025 at 8:28 PM
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணி அரசினா் கலைக் கல்லூரி முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளா்கள்.
பகிர்:

திருத்தணி: அரசுக் கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கல்லூரி முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அரசினா் கலைக் கல்லூரி உள்ளது. கல்லுாரியில் 40-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், திங்கள்கிழமை கல்லூரி நுழைவு வாயிலில் முன்பு 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நீதிமன்ற தீா்ப்பின்படி கெளரவ விரிவுரையாளா்களைப் படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்திரம் செய்யும் வரை காலமுறை ஊதியம் 12 மாதங்களும் வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதல் வழங்க வேண்டும். பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். கெளரவ விரிவுரையாளா்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம் ஏற்படுத்தி தர வேண்டும். வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கெளரவ விரிவுரையாளா்கள் முழக்கம் எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →