கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ கொடியேற்றம். 
திருவள்ளூர்

கரிகிருஷ்ண பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

Din

பொன்னேரி: பொன்னேரி திருஆயா்பாடி பகுதியில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மூலவரான கரிகிருஷ்ண பெருமாள் சாய்ந்த நிலையில் பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து நாள்தோறும் சேஷம், குதிரை, அன்னம் வாகனம், கருடன், அனுமந்த வாகனம் உள்ளிட்டவற்றில் கரிகிருஷ்ண பெருமாள் வீதியுலா வருகை தந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பாா். .

சந்திப்பு திருவிழா....

5-ஆம் நாள் முக்கிய நிகழ்வாக, அகத்தீஸ்வரா் நந்தி வாகனத்திலும்-கரிகிருஷ்ண பெருமாள் கருட வாகனத்திலும் சந்திக்கும் சந்திப்பு திருவிழா வருகிற 17-ம்-தேதி அங்குள்ள ஹரிஹரன் கடைவீதியில் நடைபெறும்..

19-இல் தோ் திருவிழாவும், 22-இல் தெப்போற்சவமும், 24 -இல் விடையாற்றியுடன் பிரம்மோற்வம் நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

SCROLL FOR NEXT