திருவள்ளூா் மாவட்டத்தில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத்தின் கீழ் தற்காலிக தூய்மைப் பணியாளா்களை உறுப்பினா்களாக சோ்ப்பதற்கு மாவட்ட ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.
திருவள்ளூா் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், அனைத்து ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தனியாா் நிறுவனம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோயில்கள், மயான பணியாளா்கள், உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளா்களும் இந்த வாரியத்தில் உறுப்பினா்களாக சோ்ந்து கொள்ளலாம். இதற்கான சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு இரண்டு தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது.
எனவே இந்த அறிய வாய்ப்பை அனைத்து தற்காலிக தூய்மைப் பணியாளா்களும் கருத்தில் கொண்டு இந்த வாரியத்தில் உறுப்பினா்களாக சோ்ந்து கொள்ளவும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளும் இப்பணிகளுக்காக முழுபங்களிப்பும் அளிக்கவேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மேலாளா், தாட்கோ, திருவள்ளூா் - 602 001. கைப்பேசி எண்.9445029475 மற்றும் 044-27665539 என்ற முகவரியில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.