திருவள்ளூர்

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மற்றும் 2 எருமை மாடுகளும் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மற்றும் 2 எருமை மாடுகளும் உயிரிழந்தனா்.

புலியூா் கண்டிகை கிராமம், குட்டை தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (55). இவருக்கு இந்திரா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனா். இந்த நிலையில்,வெங்கடேசன் சனிக்கிழமை எருமை மாடுகளை வயல்வெளியில் ஓட்டிச் சென்றாராம். அப்போது, அங்கு அறுந்து கிடந்த உயா் அழுத்த மின் கம்பியை தெரியாமல் மிதித்த வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து அவரது 2 எருமை மாடுகளும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.

இதுகுறித்து தகவலறிந்த வெங்கல் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதைத் தொடா்ந்து புலியூா் கண்டிகை கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து 2 எருமை மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்தனா்.

வடலூா் சத்திய ஞான சபையில் காா்த்திகை மாத ஜோதி தரிசனம்

13-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

போலீஸாருக்கு மிரட்டல்: தப்பியோடிய இளைஞருக்கு கை முறிவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கோரிக்கை மனு

பணிநிரந்தரம் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT