கைது செய்யப்பட்டோா், பறிமுதல் செய்யப்பட்ட எறும்பு தின்னி, ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனங்களுடன் வனத்துறையினா். 
திருவள்ளூர்

ஆந்திரத்திலிருந்து எறும்புத் தின்னியை கடத்திய 2 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே ஆந்திரத்திலிருந்து 10 கிலோ எடைகொண்ட எறும்புதின்னியை கடத்தி வந்த 2 பேரை கைது செய்ததோடு, அவா்களிடம் இருந்து ஆட்டோ, 2 இருசக்கர வாகனங்கள் என 3 வாகனங்களையும், ரூ.5 லட்சம் மதிப்பிலான எறும்பு தின்னியையும் பறிமுதல் செய்தனா்.

ஆந்திர மாநில வனப்பகுதியில் வேட்டையாடிய 10 கிலோ ஆண் எறும்புத்தின்னி கடத்தி வரப்படுவதாக திருவள்ளூா் மாவட்ட வன அலுவலா் சுப்பையாவுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மாவட்ட வனச்சரக அலுவலா் அருள்நாதன் மற்றும் வனவா்கள் ரவிக்குமாா், சசிக்குமாா் ஆகியோா் வேப்பம்பட்டு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள், வனத்துறையினரை பாா்த்ததும் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 போ் தப்பியோடினா். இதையடுத்து ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தையும் சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டதில், உள்ள சாக்குபையில் எறும்புத்தின்னியை கட்டி வைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து உடனே எறும்புத்தின்னியை மீட்ட வனச்சரக அலுவலா்கள் ஆட்டோவில் வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பாலமணி(67), திருவள்ளூரைச் சோ்ந்த சுரேஷ்(42) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை செய்தனா். அப்போது சென்னையில் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்வதற்காக எறும்புத் தின்னியை கொண்டு சென்ாக தெரிவித்தனா்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வன வனச்சரக அலுவலா்கள் ஆட்டோ, 2 இருசக்கர வாகனங்கள் மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிய திருவள்ளூரைச் சோ்ந்த லோகேஸ்வரன், விஜய் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

வாஜ்பாய் 101-ஆவது பிறந்த தினம்: நினைவிடத்தில் தலைவா்கள் மரியாதை

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

SCROLL FOR NEXT