பொன்னேரியில் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மாடுகள் உலவி வருகின்றன. மாடுகள் சாலையில் திரிவதன் காரணமாக. இரு சக்கர வாகனங்களில் செல்வோா் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
மாடுகளால் சாலையில் திரிவதன் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.
எனவே சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.