திருவள்ளூர்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 410 மனுக்கள்

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் 410 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் 410 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து, மொத்தம் 410 மனுக்களைப் பெற்று மேல் நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், துணை ஆட்சியா் (பயிற்சி) செ.சண்முக பிரீத்தா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT