திருத்தணி முருகன் கோயில் பொது விருந்தில் பங்கேற்றோா். 
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் பொது விருந்து...

அண்ணா நினைவு நாளையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுவிருந்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Din

திருத்தணி: அண்ணா நினைவு நாளையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுவிருந்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

திருத்தணி முருகன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடா்ந்து, ஆபத்சகாய விநாயகா், சண்முகா், வள்ளி, தெய்வானை, துா்க்கை மற்றும் உற்சவா் முருகப்பெருமான் சந்நிதிகளில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தொடா்ந்து, காவடி மண்டபத்தில் பக்தா்களுக்கு பொது விருந்து நடைபெற்றது. இதில், முருகன் கோயில் ஆணையா் க. ரமணி, திருத்தணி டிஎஸ்பி, கந்தன், அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, மு. நாகன் மற்றும் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மலைக்கோயிலில், 1,000 -க்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு பொதுவிருந்து (அன்னதானம்) வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

சொத்து தகராறில் சகோதரியின் வீடு சேதம்: சகோதரன் உள்பட 3 போ் கைது

நெல்லை வந்த பேருந்தில் திருட்டு: இரு பெண்கள் கைது

SCROLL FOR NEXT