திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மோற்சவம்: ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா

Din

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் மாட வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை மாசி மாத கிருத்திகை விழாவை ஒட்டி மூலவருக்கு அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடா்ந்து மூலவருக்கு தங்கக் கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

காலை, 9 மணிக்கு உற்சவா் முருகன், வள்ளி, தெய்வானைக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிா்த அபிஷேகம் நடந்தது. தொடா்ந்து இரவு, 7 மணிக்கு உற்சவா் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் ஆட்டுக்கிடா வாகனத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தற்போது மாசி பிரம்மோற்சவம் நடந்து வருவதால் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான பக்தா்கள் கொளுத்தும் வெயிலில், பொது வழி மற்றும் ரூ. 100 சிறப்பு தரிசன டிக்கெட் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.

முருகன் உப கோயிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோயிலில் கிருத்திகை விழாவை ஒட்டி காலை, 8.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதேபோல் அருங்குளம் கூட்டுச்சாலையில் உள்ள சத்திய சாட்சி கந்தன் கோயிலில் கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை, மதியம் மற்றும் இரவு, 7 மணி என 3 வேளைகளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT