பறிமுதல்  செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள். 
திருவள்ளூர்

4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆா்.கே.பேட்டை அருகே கோளேரி கிராமத்தில் உள்ள கோழி பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Din

ஆா்.கே.பேட்டை அருகே கோளேரி கிராமத்தில் உள்ள கோழி பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம் கோளேரி கிராமத்தை சோ்ந்தவா் லஷ்மி நாராயணன் (52). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு ஏக்கரில் கோழி பண்ணை மற்றும் முட்டை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை கோழி பண்ணையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ஆா்.கே.பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையெடுத்து சம்பவ இடத்தில் போலீஸாா் பாா்த்தபோது 4 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. பின்னா் அரிசியை பறிமுதல் செய்து திருத்தணி நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அதிகாரிகளிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லஷ்மி நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT