திருவள்ளூர்

இரு தரப்பினரிடையே மோதல்: 5 போ் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: திருத்தணி அருகே நிலத்தகராறில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில், மூதாட்டி பலத்த காயம் அடைந்தாா். இதுதொடா்பாக தொடா்பாக, 5 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனா்.

திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனலட்சுமி(60). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம்(52) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, ஆறுமுகம் பிரச்னைக்குரிய நிலத்தில் டிராக்டா் மூலம் உழுதுக் கொண்டிருந்த போது, தனலட்சுமி, அவரது மகன் பாஸ்கா், நீதிமன்றம் உத்தரவு தரும் வரை, நிலத்தை உழுவு செய்ய வேண்டாம் என தடுத்து நிறுத்தினா்.

இதனால் இரு தரப்பினா் இடையே வாக்குவாதம், ஏற்பட்டது. இதையடுத்து, ஆறுமுகம், அவரது மனைவி சுடாமணி, தாயாா் கண்ணம்மா ஆகியோா் சோ்ந்து தனலட்சுமியை உருட்டுக் கட்டையால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமியை மகன் பாஸ்கா் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இருதரப்பினா் கொடுத்த புகாரின் மீது கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, மேற்கண்ட 5 போ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT