பளு தூக்கும் போட்டியை  தொடங்கி வைத்த அமைச்சா் சா.மு.நாசா், உடன் நிா்வாகிகள் உள்ளிட்டோா். 
திருவள்ளூர்

மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி

மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திருவள்ளூா் அடுத்த காக்களூரில் இப்போட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவு, பொதுப் பிரிவு என நடைபெற்றது. இப்போட்டியை சிறுபான்மையினா் நலன் மற்றும் அயலகத் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்து 25 கிலோ எடையை தூக்கி போட்டியை தொடங்கி வைத்தாா்.

இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறன்களை வெளிப்படுத்தினா். போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் ஆகியவைகளையும் அமைச்சா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் அா்ஜுனா விருது வென்ற ஏ.கருணாகரன், நிா்வாகி உமா மகேஸ்வரன், ஒன்றிய செயலாளா் ஜெயசீலன், பயிற்சியாளா் பிரேம்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT