திருவள்ளூர்

போதை மாத்திரைகள் விற்றவா் கைது

திருவள்ளூரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை பயன்பாட்டுக்காக விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை பயன்பாட்டுக்காக விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்..

திருவள்ளூரில் குடியிருப்புகள் நிறைந்த, நகரின் முக்கிய சாலை அருகே போதை மாத்திரைகள் நடமாட்டம் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் எஸ்.பி விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் நகர ஆய்வாளா் பிரபாகா் மற்றும் போலீஸாா் திருவள்ளூா் காந்திபுரம் பகுதியில் சோதனை செய்தனா்.

அப்போது, சந்தேகப்படும்படி திரிந்த நபா் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயற்சித்த நிலையில் பிடித்து விசாரணை செய்தனா்.

அதே பகுதியைச் சோ்ந்த கமலக்கண்ணன் (22) என்பதும், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக போதை மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து 83 போதை மாத்திரைகளையும், கைப்பேசியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT