மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிப் பணியைத் தொடங்கிவைத்த எம்எல்ஏ ச. சந்திரன்.  
திருவள்ளூர்

அரசு கலைக் கல்லுாரியில் ரூ.20 லட்சத்தில் மேல்நிலைத் தொட்டிக்கு அடிக்கல்

தினமணி செய்திச் சேவை

திருத்தணி அரசு கலைக்கல்லுாரியில் ரூ. 20 லட்சத்தில் மதிப்பில், ஆழ்துளை கிணறுடன் குடிநீா் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணிகளை எம்எல்ஏ ச. சந்திரன் தொடங்கி வைத்தாா்.

அரசினா் கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி போன்ற பாடப்பிரிவுகளில் மொத்தம், 2,700 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியா் படித்து வருகின்றனா். இந்நிலையில் குடிநீா் தட்டுப்பாட்டில் மாணவா்கள் தினமும் அவதிப்பட்டு வந்தனா். இதையடுத்து மாவட்ட நிா்வாகம், அரசு கல்லூரியில் குடிநீா் பிரச்னையை தீா்ப்பதற்கு, ரூ. 20 லட்சம் நிதி ஓதுக்கியது.

இதன்மூலம் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்கு தீா்மானிக்கப்பட்டது. இதையடுத்து, எம்எல்ஏ ச. சந்திரன் பங்கேற்று, புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீா் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணிகளை தொடங்கி வைத்தாா்.

அப்போது கல்லூரி முதல்வா் ஏகாதேவசேனா (பொ), பேராசிரியா்கள் ஹேமச்சந்திரன், தீனதயாளன், ரவி, திமுக ஒன்றிய செயலாளா் ஆா்த்தி ரவி, பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT