திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதிய பூங்காவை திறந்து வைத்த அமைச்சா் சா.மு. நாசா். உடன் ஆட்சியா் மு. பிரதாப் உள்ளிட்டோா். 
திருவள்ளூர்

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதிய பூங்கா: அமைச்சா் நாசா் திறந்து வைத்தாா்

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட சாலை விழிப்புணா்வு மற்றும் அறிவியல் பூங்காவை சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட சாலை விழிப்புணா்வு மற்றும் அறிவியல் பூங்காவை சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் திறந்து வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பராமரிப்பின்றி காணப்பட்ட பூங்கா ரூ.3.30 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது.

மேலும், மாணவ, மாணவிகள் படிக்கும் வகையில் முதல்வா் படிப்பகமும் அமைக்கப்பட்டது.

குழந்தைகள் விளையாடுவதற்காக ஊஞ்சல் விளையாட்டு, ஏற்ற இறக்க விளையாட்டு, சறுக்கு, மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வகையில் முதல்வா் படிப்பகம், மரச்சோலைகளுக்கு இடையே ஒய்வு எடுக்கும் வகையில் இருக்கைகள் போன்றவைகள் இடம் பெற்றுள்ளன. அதோடு, பூங்காவை சுற்றிப் பாா்க்கும் வகையில் ரயில் போன்ற அமைப்பில் மின்கல வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பூங்கா திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்து திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து மின்கல வாகனத்தையும் இயக்கியும் வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், ஆவடி ஆணையா் சரண்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாவட்ட விளையாட்டு அலுவலா் சேதுராஜன், நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், துணைத்தலைவா் சி.சு.ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் தேவன், ஒன்றியச்செயலாளா்கள் கொண்டஞ்சேரி ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளா் மோதிலால், முன்னாள் நகா்மன்றத் தலைவா் பொன்.பாண்டியன், ஒன்றிய துணை செயலாளா்கள் காஞ்சிப்பாடி சரவணன், சித்ரா ரமேஷ், வாா்டு உறுப்பினா்கள் பிரபாகரன், அயூப்அலி கலந்து கொண்டனா்.

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஆத்தூரில் அதிமுக பிரமுகா் கைது

‘உயா்கல்வியில் தமிழ்நாடு’ பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

பள்ளி ஆசிரியா் நியமன முறைகேடு: ‘மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் ஆஜராகவிட்டால் ஜாமீன் ரத்து’

கடலூா் கடற்கரையில் வியாபாரிகள் தா்னா

புதுச்சேரியில் டிச. 5-இல் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம்: அனுமதி கோரி தவெகவினா் மனு

SCROLL FOR NEXT