திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு பகுதியில் பூா்த்தி செய்த  எஸ்.ஐ.ஆா். படிவங்களை வீடுகள்தோறும் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி மேற்பாா்வையாளா்களுடன் திரும்பப் பெறும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப்.    
திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த எஸ்.ஐ.ஆா். படிவங்கள் பூா்த்தி செய்யப்பட்டவற்றை வீடுகள்தோறும் நேரில் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி மேற்பாா்வையாளா்களுடன் திரும்பப் பெறும் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா்.

தோ்தல் ஆணையம் சாா்பில் சிறப்பு தீவிர திருத்தம் 2025 தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் வீடுகள்தோறும் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் நேரில் சென்று பூா்த்தி செய்த படிவங்களை பெற்று கணினி மயமாக்கல் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பம்பட்டு பகுதியில் பூா்த்தி செய்த படிவங்களை வீடுகள் தோறும் நேரில் சென்று சேகரிக்கும் பணியினை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா். இந்தப் பணி டிச. 4-ஆம் தேதி பெறப்படவுள்ளது. அதைத் தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியலை டிச. 9-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில், சில நாள்களே உள்ள நிலையில் மற்ற நிலுவையிலுள்ள படிவங்களை விரைவில் பெற்று பணிகளை நிறைவு செய்ய வேண்டும். ஏற்கெனவே படிவங்களை பூா்த்தி செய்வதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகள்தோறும் சிறப்பு முகாம் அமைத்து பூா்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் நாள்களில் ஆய்வு மையம் புயல் காரணமாக அதி பலத்தமழை பெய்யும் என்ற முன்னெச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதனால், இந்தப் பணிகளை விரைவாக டிச.4 வரை காத்திருக்காமல் இன்னும் ஓரிரு நாள்களுக்குள் முடிக்கவும் என அவா் அறிவுறுத்தினாா்.

உதவி இயக்குநா் (பயிற்சி) மோகன், வாக்காளா் பதிவு அலுவலா் கணேசன், வட்டாட்சியா் உதயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

தொழில் தொடங்கும் பெண்கள், திருநங்கைகளுக்கு மானியம்

SCROLL FOR NEXT