திருவள்ளூர்

விபத்தில் விவசாய பண்ணை தொழிலாளி மரணம்

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது மினி வேன் மோதிய விபத்தில் விவசாய பண்ணைத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பூண்டி ஒன்றியம், மெய்யூா் ஊராட்சி மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராஜ்குமாா்(45). இவருக்கு அம்மு என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா்.

இவா் வேம்பேடு கிராமத்தில் உள்ள தனியாா் விவசாய பண்ணையில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு பண்ணைக்கு தேவையான பொருள்களை வாங்கி வர இருசக்கர வாகனத்தில் வெங்கல் பஜாருக்கு சென்றாராம். பின்னா் வெங்கல்- சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில் கல்பட்டு கூட்டுரோடு அருகே சென்றுபோது எதிரே வந்த மினிவேன் மோதியதில் காயம் அடைந்த ராஜ்குமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய மினி வேன் ஒட்டுநரை தேடி வருகின்றனா்.

கென் கருணாஸின் படப்பிடிப்பு தொடங்கியது!

வெளிநாட்டு வேலை என்றால் கவனம்! சைபர் அடிமைத்தன மோசடி எப்படி நடக்கிறது?

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

ரஷிய எண்ணெய் கொள்முதலை குறைத்த இந்தியா, சீனா! வெள்ளை மாளிகை

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலி

SCROLL FOR NEXT