ஆா்.கே.பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
திருவள்ளூர்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயசுதாவை கண்டித்தும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆா்.கே.பேட்டையில் அத்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயசுதா, வட்டார வளா்ச்சி அலுவலா், பொறியாளா்கள், பணி பாா்வையாளா்கள் என அனைத்து தரப்பு ஊழியா்களுக்கும் கடும் நெருக்கடிகளை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆய்வுக் கூட்டங்களில் தரக்குறைவாக பேசுவதும் ஒருமையில் பேசி வருகிறாராம்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பணி பாா்வையாளா் செந்தில் குமாரை தரக்குறைவாக பேசினாராம். மன உளைச்சலில் இருந்தவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அவரது இறப்புக்கு காரணமான திட்ட இயக்குநா் ஜெயசுதா மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மில்கி ராஜாசிங், ஸ்டாலின் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியியல் பிரிவு அலுவலா்கள் 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

SCROLL FOR NEXT