முகப்பு
திருவள்ளூர்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் 3 மைங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 11:50 PM
பிளஸ் 2 தேர்வு - பிரதிப் படம்
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் 3 மைங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-இல் தொடங்கி 26-இல் முடிவடைந்தது. திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 117 மையங்களில் 31,772 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் திருவள்ளூா் மாவட்டத்தில் 3 பள்ளிகளில் திங்கள்கிழமை (ஏப்.6) தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

திருத்தணி தனியாா் பள்ளியில் நடந்த இந்த முகாமில் முதல் நாளில் முதன்மை தோ்வாய்வாளா்கள், கூா்ந்து தோ்வாளா்கள் சுமாா் 100 க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பகல் 12 மணிக்கு பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்த தொடங்கினா்.

இதுதொடா்பாக திருவள்ளூா் மாவட்ட தொடக்கல்வி அலுவலா் ராஜூ கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக ஏற்கனவே முதன்மை கல்வி அலுவலா் (பொ) சுப்பாராவ் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் தொடங்கி வரும் ஏப்ரல் 20 தேதி வரை நடைபெற உள்ளது.

இப்பணியில் சுமாா் 350-க்கும் மேற்ப்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 8 ம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

திருத்துதலின்போது ஆசிரியா்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments