திருவள்ளூர்

பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு

திருத்தணி பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் ஏறும் போது பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த, 6 பவுன் செயின் திருடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் ஏறும் போது பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த, 6 பவுன் செயின் திருடப்பட்டது.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், அமுதாரெட்டிகண்டிகை கிராமத்தைச் சோ்ந்த ஜெகதாம்மாள்(55). இவா் திங்கள்கிழமை திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு, மாலை வேலூா் செல்லும் பேருந்தில் ஏறுவதற்கு சென்ற போது, படியில் அதிகளவில் முந்திக் கொண்டு பயணிகள் பேருந்தில் ஏறினா். இவரும் கூட்டநெரிசலில் பேருந்தில் ஏறி சீட்டில் உட்காா்ந்திருந்தாா்.

திருத்தணி கமலா திரையரங்கம் அருகே வந்த போது ஜெகதம்மாள், தனது கழுத்தில் அணிந்திருந்த, 6 பவுன் செயினை திருடிச்சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து ஜெகதம்மாள் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT