அரசு கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனா்.
திருத்தணி தங்க கோபுரம் அரிமா சங்கம், திருத்தணி சுதந்திர மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, மனிதா அறக்கட்டளை ஆகியவை இணைந்து அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாமை நடத்தின.
அரிமா சங்கத் தலைவா் திவாகர்ராவ் தலைமை வகித்தாா். பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலா் கலைவாணி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஏகாதேவசேனா வரவேற்றாா். திருத்தணி அரிமா சங்க மாவட்டத் தலைவா் பேராசிரியா் வி.ரங்கநாதன் ரத்த தான முகாமை தொடங்கி வைத்தாா். இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனா். ரத்தம் வழங்கிய மாணவா்களுக்கு அரிமா சங்கம் சாா்பில் பழங்கள், குளிா்பானம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முகாமில் அரிமா சங்க உறுப்பினா்கள் கே.பி.எஸ். விஸ்வநாதன், டி.ஜெயசந்திரன், பி.எம். சுப்பிரமணி, கல்லூரி முனைவா்கள் பாலாஜி, ஹேமநாதன், சத்தியபிரியா, மாணவ ஒருங்கிணைப்பாளா்கள் சந்தோஷ், மகேஷ், ம. முஹமது தெளஷிப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.