திருவள்ளூா் அருகே தென்பாஸ்கோ வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராமப்புற அனுபவ திட்டத்தின்படி விதை நெல்லின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு மற்றும் செய்முறை ஒத்திகையும் நடத்தி காண்பித்தனா்.
திருவள்ளூா் அருகே கிராமப்புற அனுபவ திட்டத்தின்படி புல்லரம்பாக்கம் கிராமத்தில் தென்பாஸ்கோ வேளாண்மை கல்லூரி மாணவிகள் விதை நெல் குறித்து விழிப்புணா்வு முகாம் மற்றும் ஈங்ம்ா்ய்ள்ற்ழ்ஹற்ண்ா்ய் - செய்முறை ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அப்போது விவசாயிகளுக்கு விதை நெல் தயாா் செய்வது தொடா்பான ஒத்திகை மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.
அதைத்தொடந்து விவசாயிகள் பங்கேற்று ஐபஓ எனப்படும் ஐய்க்ண்ஞ்ங்ய்ா்ன்ள் பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப் ந்ய்ா்ஜ்ப்ங்க்ஞ்ங் முறைபடி உருவாக்கப்பட்ட கரைசல்கள் பஞ்சகாவ்யா, தசகாவ்யா, மீன் அமிலம், அமிா்தகரைசல், மீன் எண்ணெய், தேமோா் கரைசல், 5 இலை கரைசல், 10 இலை கரைசல், பழ கரைகல், கற்பூர கரைசல், உள்ளிட்ட இயற்கை முறையில் -பூச்சி விரட்டி மற்றும் கிருமி நாசினிகள் செய்முறை மற்றும் மகசூல் அதிகரிக்கும் முறைகளை விவசாயிகளுக்கு மாணவிகள் விளக்கமாக எடுத்துரைத்தனா்.
முகாமில் விவசாயிகள் 40-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.