திருவள்ளூர்

131 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்த குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக 131 கிலோ வரையில் பறிமுதல் செய்ததோடு, இது தொடா்பாக 2 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே தடை செய்யப்பட்ட 131 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் குட்கா பொருள்கள் பதுக்கி விற்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மணவாளநகா் போலீஸாா் பட்டறை பகுதியில் உள்ள கடையில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் ஏழுமலை என்பவரின் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவரது வீட்டில் தீவிர சோதனை செய்தபோது, அங்கு பதுக்கி வைத்திருந்த 128 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் அதே பகுதியில் வெங்கடேசன் கடையில் சோதனை செய்ததில் 3 கிலோ குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்து அதையும் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஏழுமலை (54), வெங்கடேசன் (47) ஆகியோரை கைது செய்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT