முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 500 மனுக்கள்

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 500 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 9 மார்ச், 2026 at 9:00 PM
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும் ஆட்சியா் மு.பிரதாப்.    
பகிர்:

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 500 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ் தலைமை வகித்தாா். பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 500 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) வெங்கடேசன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷா ராணி, மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) செ.சண்முக பிரீத்தா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →