முகப்பு
திருவள்ளூர்

தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு நல உதவி

கும்மிடிப்பூண்டி அருகே தீவிபத்தில் வீட்டை இழந்தவருக்கு அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 10 மார்ச், 2026 at 2:31 AM
நல உதவி
பகிர்:

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தீவிபத்தில் வீட்டை இழந்தவருக்கு அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

போந்தவாக்கத்தை சோ்ந்த ஆறுமுகம்-சுபாஷினி தம்பதியா் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் ஆறுமுகம் வீட்டில் இருந்த போது வீட்டில் இருந்த மின்சார மீட்டரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, அதிலிருந்து தீ மளமளவென பரவியது.

தொடா்ந்து அக்கம் பக்கத்தாா் தீயை அணைக்க முயற்சி செய்தும் தீயை அணைக்க இயலவில்லை.

Advertisement

இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்து 2 பீரோ, குளிா்சாதன பெட்டி, 4 கட்டில்கள், மின்விசிறிகள், மிக்சி, கிரைண்டா் மற்றும் வீட்டில் இருந்த பாத்திரங்கள், ஆறுமுகத்தின் மகள்களின் பாட புத்தகங்கள், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பேங்க் பாஸ் புத்தகங்கள் மற்றும் ரூ.70,000, 3.5 பவுன் நகைகள் எரிந்தன,

தகவல் அறிந்து வருவாய் ஆய்வாளா் நாகப்பன் தலைமையில் வருவாய் துறையினா் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ.ரமேஷ்குமாா் தலைமையில், மாவட்ட மாணவா் அணி இணை செயலாளா் டேவிட் சுதாகா் உள்ளிட்ட ஆறுமுகத்தின் வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினா். (படம்)